Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் தடை

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 18 Aug 2022 7:10:47 PM

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் தடை

கோவை : சில நாட்களாகவே தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் மாதாந்திர பணியானது தவறாமல் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்டு வருவதால் எந்தெந்த மாவட்டங்களில், பகுதிகளில் மின்தடை ஆகும் என மொத்த விவரங்களையும் முன்னதாகவே மின்வாரியம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுவிடும். அதன் படி கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையம் : பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு வருகிற (ஆக.20) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

electricity supply ban,coimbatore , மின் விநியோகம் தடை ,கோவை

இதை அடுத்து உக்கடம் துணை மின் நிலையம்: பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு.

மேலும் சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளுக்கு 20ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :