Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 10 Aug 2022 8:40:10 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாளை மின்  விநியோகம் தடை

கன்னியாகுமரி : மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமாகும். இதை தவிர்ப்பதற்காகவே தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.

அதன்படி நாளை (ஆக.11) குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்க இருக்கிறது. இந்த பணியின் போது மின் பாதைகளில் இருக்கும் பழுதை நீக்கவும், மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

power supply cut off,kanyakumari ,மின்  விநியோகம் தடை,கன்னியாகுமரி

இதையடுத்து அப்போது மின் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்குமாறு மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவென்னி போன்ற இடங்களுக்கு அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்குறிப்பிட்ட பணியின் நிமித்தம் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை .

Tags :