மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை
By: vaithegi Thu, 23 Nov 2023 3:51:52 PM
சென்னை: சென்னையில் நாளை மின் இணைப்பு சரிபார்க்கும் பணி நடைபெறுவதால் இந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை ....தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் இணைப்பு பகுதிகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
அதிலும், குறிப்பாக தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு.
மின்தடை:
புதுக்கோட்டை:
நெடுவாசல், குருவாடி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி, கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி
கொத்தமங்கலன்:
கொத்தமங்கலம், பொன்னேரி, ஆப்புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்
வியாசர்பாடி:
இஎச் சாலை, பி வி காலனி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி எஸ்டேட், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், கிழக்கு குறுக்கு, சாந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் ரோடு, வியாஸ்
பி.ஜி.பாளையம்;
விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சம்பாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ் பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.