Advertisement

ட்விட்டரை வாங்க ஒருவழியாக ஒத்துக் கொண்ட எலான் மஸ்க்

By: Nagaraj Thu, 06 Oct 2022 10:45:27 AM

ட்விட்டரை வாங்க ஒருவழியாக ஒத்துக் கொண்ட எலான் மஸ்க்

நியூயார்க்: டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை கையகப்படுத்துவது உறுதியான நிலையில் ட்விட்டரின் பங்குகள் விற்பனை 23% அதிகரித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். தொடர்ந்து முடிவுகள் இணக்கமாக எட்டப்படாத நிலையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை ரத்து செய்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

elon musk,twitter,shares,price,higher,said ok ,எலான் மஸ்க், ட்விட்டர், பங்குகள், விலை, உயர்ந்தது, ஓகே சொன்னார்

இச்சூழலில் முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, ட்விட்டர் பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


முன்னதாக செவ்வாய்க்கிழமை நியூயார்க் பங்குச்சந்தையில் ட்விட்டர் பங்குகளின் விலை 42 டாலர் என்றளவிலேயே வர்த்தகமானது. ஆனால் ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கும் செய்திகள் உறுதியான நிலையில் அதன் பங்குகளின் விலை உயரத்தொடங்கியது.


வர்த்தக முடிவின்போது ஒரு ட்விட்டர் பங்கின் விலை 54.20 டாலர் என்றளவில் வர்த்தகமானது. அதே வேளையில் எலான் மஸ்கின் டெஸ்லா பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது.

Tags :
|
|
|