Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிவிட்டர் அலுவலகத்திற்கு வாஷ்பேசினுடன் வந்த பரபரப்பை ஏற்படுத்தி எலான் மஸ்க்

டிவிட்டர் அலுவலகத்திற்கு வாஷ்பேசினுடன் வந்த பரபரப்பை ஏற்படுத்தி எலான் மஸ்க்

By: Nagaraj Fri, 28 Oct 2022 06:45:14 AM

டிவிட்டர் அலுவலகத்திற்கு வாஷ்பேசினுடன் வந்த பரபரப்பை ஏற்படுத்தி எலான் மஸ்க்

சான்பிரான்சிஸ்கோ: வாஷ்பேசினுடன் வந்த எலான் மஸ்க்... நீதிமன்றம் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டிவிட்டர் அலுவலகத்துக்கு வாஷ் பேசினுடன் எலான் மஸ்க் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், அமெரிக்க கோடீஸ்வரரான எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்கு வாங்க முன்வந்தார். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால், திடீரென இந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். டிவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என தெரிவித்தார்.

மஸ்க்கின் இந்த முடிவை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக். 28ம் தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் இன்று மாலைக்குள் டிவிட்டர் ஒப்பந்த உடன்படிக்கையை முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியானது.


இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் (இன்றுக்குள்) முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

elon musk,washbasin,twitter,company,court,bad ,எலான் மஸ்க், வாஷ்பேசின், ட்விட்டர், நிறுவனம், கோர்ட், கெடு

இதற்கிடையில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டிவிட்டரின் தலைமை அலுவலகத்துக்கு எலான் மஸ்க் நேற்று சென்றார். அவர் தனது கையில் வாஷ் பேசின் (சிங்க்) ஒன்றை சுமந்து சென்றார்.

இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து உள்ள மஸ்க், தனது டிவிட்டர் பக்கத்தில் 'டிவிட்டர் தலைவர்'என்று மாற்றி உள்ளார். மஸ்க், ஏன் கையில் பாத்ரூம் சிங்கை கொண்டு வருகிறார் என்று நிர்வாகிகள் குழம்பினர். ஒரு செய்தியில் மூழ்கி போய் விடுங்கள் என்று பொருள்படும் வகையில் 'லெட் தி சிங்க் இன்' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதை குறிப்பிடும் வகையில்தான் எலான் மஸ்க் சிங்க்கை கொண்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் டிவிட்டரை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Tags :
|