Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எலான் மஸ்க்... அதிருப்தியில் ஊழியர்கள்

ஊழியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எலான் மஸ்க்... அதிருப்தியில் ஊழியர்கள்

By: Nagaraj Sun, 13 Nov 2022 3:42:18 PM

ஊழியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எலான் மஸ்க்... அதிருப்தியில் ஊழியர்கள்

வாஷிங்டன்: பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார் எலான் மஸ்க். இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

ட்விட்டர் பங்குகளை வாங்கிய கையோடு பாதியளவு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க், எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் 80 மணி நேரம் வேலை இலவச உணவு ரத்து செய்து கெடுபிடிகளை விதித்துள்ளார்.

elanmusk,privileges,free food,condition,discontent ,எலான்மஸ்க், சலுகைகள், இலவச உணவு, நிபந்தனை, அதிருப்தி

அத்துடன் ஊழியர்கள் மத்தியில் பேசிய எலன் மஸ்க், மேலும் நிதி ஆதாரத்தைப் பெருக்காமல் போனால் நிறுவனம் திவால் ஆவதைத் தவிர்க்க முடியாது என்றும் எச்சரித்தார். மேலும் கோவிட் காலத்தையொட்டி வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் சலுகைகள் போன்றவற்றையும் எலன் மஸ்க் ரத்து செய்துள்ளார்.

இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற எலான் மஸ்க் மேலும் பல நிபந்தனைகளை விதிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

Tags :