Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெஸ்லா ஊழியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தார் எலான் மஸ்க்

டெஸ்லா ஊழியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தார் எலான் மஸ்க்

By: Nagaraj Wed, 22 June 2022 00:02:47 AM

டெஸ்லா ஊழியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்தார் எலான் மஸ்க்

நியூயார்க்: ஊழியர்கள் பணி நீக்கம்.. சர்வதேச பிரபல நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான செய்தியை எலோன் மஸ்க் உறுதி படுத்தினார். ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடரும் என்று மஸ்க் கூறுகிறார். இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களை எச்சரிக்கும் விதமாக அவர் சொல்வது வைரலாகிறது. 'அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறி விடுங்கள்' என்று எச்சரிக்கை பல ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. டெஸ்லா தனது ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். மூன்று மாத காலத்திற்குள் தொழிலாளர்களில் 10 சதவிகிதம் குறைக்கும் என்று நிறுவனத்தின் தலைவரும் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் மஸ்க் கூறினார்.

economy,recession,company,tesla,employees,layoffs ,பொருளாதாரம், மந்த நிலை, நிறுவனம், டெஸ்லா, ஊழியர்கள், பணி நீக்கம்

10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஊழியர்களுக்கு மஸ்க் எழுதிய கடிதத்தை ஒரு அறிக்கை மேற்கோள் காட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த விஷயம் வெளிப்படையாக வெளிவந்துள்ளது. டெஸ்லா மக்கள் எண்ணிக்கையை குறைப்பதுடன் நிற்கப்போவதில்லை என்று ப்ளூம்பெர்க் ஏற்பாடு செய்த கத்தார் பொருளாதார மன்றத்தின் போது எலோன் மஸ்க் தெரிவித்தார். ​​அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனத்தின் 10 சதவிகிதத்தினர் குறைக்கப்படுவார்கள் என்று கூறிய மஸ்க், உலகப் பொருளாதார மந்தநிலையைக் கையாள்வதற்கான நிறுவனத்தின் வழி இதுதான் என்று தெரிவித்தார்.

Tags :
|