Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன் .. எலான் மஸ்க்

அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன் .. எலான் மஸ்க்

By: vaithegi Wed, 21 June 2023 10:22:46 AM

அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன் ..  எலான் மஸ்க்

இந்தியா: பிரதமர் மோடியுடன் ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் சந்திப்பு .... பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இதையடுத்து இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, வெள்ளை மாளிகையில் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின்னர் பேசிய எலான் மஸ்க், “ நான் மோடியின் ரசிகன். அவர் ( பிரதமர் மோடி) இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார்.

elon musk,prime minister modi ,எலான் மஸ்க்,பிரதமர் மோடி

மேலும் அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

கூடிய விரைவில் இது பற்றிய அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என நம்புகிறேன். நான் அடுத்தாண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்க் இணையம், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது” என்றார். மேலும், அரசுகளின் சட்டங்களுக்கு கட்டுப்படுவதை தவிர ட்விட்டருக்கு வேறு வழியில்லை எனவும் , அப்படி கட்டுப்படாவிட்டால் மூடப்பட்டுவிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :