ஆள்மாறாட்ட கணக்குகள் குறித்து எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை
By: Nagaraj Tue, 08 Nov 2022 10:25:28 AM
நியூயார்க்: ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகள்... டிவிட்டரில் parody என குறிப்பிடாமல், பிறரின் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிவிட்டரில் பொதுவாக கணக்குகளை முடக்கும் முன் பயனர்களுக்கு அது குறித்து எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 'பரோடி' என குறிப்பிடாத கணக்குகளை எச்சரிக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் என தங்களது கணக்கின் பெயரை மாற்றி, அவரை கேலி செய்து
பதிவிட்டு வந்த பல கணக்குகள் ஏற்கனவே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே
போலி கணக்குகள் குறித்து முழுமையாக தரவில்லை என்றுதான் எலான் மஸ்க்
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இருப்பினும் டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில்
ஒப்பந்தப்படி வாங்கினார். தொடர்ந்து ஊழியர்களையும் பணியில் இருந்து
நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.