Advertisement

ஏம்பா என்ன ஆர்டர் செஞ்சா... என்ன அனுப்பி இருக்கீங்க.!

By: Nagaraj Wed, 12 Oct 2022 11:24:40 AM

ஏம்பா என்ன ஆர்டர் செஞ்சா... என்ன அனுப்பி இருக்கீங்க.!

உத்தரபிரதேசம்: கைக்கடிகாரம் ஆர்டர் செய்தா வந்ததோ வறட்டி... உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் சிஓடிமுறையில் ஆர்டர் செய்திருந்தார்.

delivery,watch,order,pay,dry,shock ,டெலிவரி, கைக்கடிகாரம், ஆர்டர், பணம், வறட்டி, அதிர்ச்சி

அந்த வாட்ச் ஒன்பது நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 7ம் தேதி தான் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாட்சை நீலம் தன்னுடைய சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யப்பட்ட வாட்சை பார்ப்பதற்காக ஆர்வமாக பார்சலை பிரித்து பார்ந்த ரவேந்திராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்திருந்தது.


ஏனெனில் அதில் வாட்சுக்கு பதில் மாட்டு சாணத்தால் ஆன 4 வறட்டிகளே இருந்திருக்கிறது. அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள்.

Tags :
|
|
|
|