Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இந்திய தூதரகம்

இலங்கையில் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இந்திய தூதரகம்

By: Karunakaran Sun, 23 Aug 2020 3:14:58 PM

இலங்கையில் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இந்திய தூதரகம்

இலங்கையில் வீட்டுவசதி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த திட்டப்படி, தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் வீடுகள் என மொத்தம் 63 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டி தருகிறது. இந்தியாவின் வீட்டு வசதி திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

embassy of india,india,housing project,sri lanka ,இந்திய தூதரகம், இந்தியா, வீட்டுவசதி திட்டம், இலங்கை

இந்நிலையில் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் இந்தியாவின் திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் மூலம் அங்கு வசிக்கும் தோட்ட பகுதி மக்கள் மற்றும் கிராம மக்கள் பயனடைவார்கள். 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணி கிட்டத்தட்ட சிறப்பாக முடிவடைந்து விட்டதால், இலங்கை- இந்திய உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|