Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

By: Nagaraj Tue, 28 Nov 2023 10:18:18 PM

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

சீனாவில் குழந்தைகளின் நுரையீரலைத் தாக்கும் புதிய வகையான வைரஸ் தொற்று வேகமாக பரவி கொண்டு வருகிறது. எச்9என்2 வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ள அந்த நிமோனியா தொற்று சுவாசத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த வைரஸ் தொற்று கரோனாவை போலவே மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்த விஷயத்தில் உலக சுகாதார நிறுவனம் தனி கவனம் செலுத்தி கொண்டு வருகிறது. இதன் இடையே, நிமோனியா, தீவிர சுவாச பாதிப்பு, நுரையீரல் தொற்றுகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

china,new virus,emergency,consultation meeting,health department ,சீனா,புதிய வைரஸ், அவசரம், ஆலோசனை கூட்டம், சுகாதாரத்துறை

இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “சீனாவில் பரவும் வைரஸ் நோய், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேநேரம், சீனாவிலிருந்து தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள வைரஸ் தன்மைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.

Tags :
|