Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் அவசர ஆலோசனை

உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் அவசர ஆலோசனை

By: Karunakaran Tue, 01 Dec 2020 1:56:48 PM

உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் அவசர ஆலோசனை

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின் நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதி மற்றும் டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

emergency consultation,defense,agriculture ministers,farmers struggle ,அவசர ஆலோசனை, பாதுகாப்பு, விவசாய அமைச்சர்கள், விவசாயிகள் போராடுகிறார்கள்

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் வைத்து உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் இணைந்து விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் , விவசாயிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாய குழுக்கள் நிராகரித்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தற்போது விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று மீண்டும் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜேபி நட்டாவும் பங்கேற்றுள்ளார். இதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மற்றும் வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமா? உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம்.

Tags :