Advertisement

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்..

By: Monisha Wed, 13 July 2022 7:53:46 PM

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்..

இலங்கை: இலங்கையில் மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது.இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து, இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இரு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார்.

அவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தவறியதாகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

emergency,declared,economic issue,people ,பிரகடனம், மக்கள், போராட்டம்,நெருக்கடி,

பொதுமக்கள் போராட்டத்துக்கு பயந்து அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலுக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார். அதேசமயம், கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவரை கைது செய்யாமல் நாட்டை விட்டு தப்பியோட விட்டு விட்டதாக குற்றம் சாட்டி இலங்கையில் போராட்டம் வெடித்துள்ளது. கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவைகளை வீசி போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Tags :