Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

By: Nagaraj Tue, 06 Oct 2020 6:57:47 PM

கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

அவசர அறிவித்தல்... நாட்டின் சில பாகங்களில் கொவிட் -19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பொலிசார் பொதுமக்களிடம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தற்போது கொவிட் -19 தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுத்துள்ளது. இதனால் இலங்கையில் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

vavuniya,people,trade centers,hand washing facility,notice ,
வவுனியா, மக்கள், வர்த்தக நிலையங்கள், கைகழுவும் வசதி, அறிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் கொவிட் -19 சுகாதார நடைமுறையினை நேற்று தொடக்கம் பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் சமூக இடைவெளி, முகக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் சுகாதார நடைமுறையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|