Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் பொருள்களை இறக்கி வைக்க கூலி வழங்க வேண்டாம் ..ஊழியர்களுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளில் பொருள்களை இறக்கி வைக்க கூலி வழங்க வேண்டாம் ..ஊழியர்களுக்கு உத்தரவு

By: vaithegi Tue, 24 Oct 2023 4:40:50 PM

ரேஷன் கடைகளில் பொருள்களை இறக்கி வைக்க கூலி வழங்க வேண்டாம் ..ஊழியர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.

இதையடுத்து இந்த கலக்கம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளுக்கு மாத இறுதியில் பொருட்களை அனுப்புகிறது. அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பெரிய கூட்டுறவு சங்கங்கள், லாரிகளில் சுமை தூக்கும் ஊழியர்களுடன் பொருட்களை ஏற்றி ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது.

employees,goods in ration shops,associations ,ஊழியர், ரேஷன் கடைகளில் பொருள்கள்,சங்கங்கள்

ஆனால் அப்போது பொருட்களை இறக்கி வைக்க சுமை தூக்கும் ஊழியர்கள், ஒரு முழு லோடுக்கு 700 ரூபாயும், பாதி லோடுக்கு 400 ரூபாய் கேட்கின்றனர். அததை ரேஷன் கடை ஊழியர்கள் கை காசில் வழங்க வேண்டிய நிலைமை இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், ரேஷன் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு லாரியில் அனுப்பப்படும் பொருட்களை இறக்க சுமை துாக்கும் ஊழியர்களுக்கு இறக்கு கூலி வழங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :