Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

வரும் வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 22 Nov 2022 1:42:28 PM

வரும் வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி: வேலைவாய்ப்பு முகாம் ........ தமிழக அரசு படித்த மற்றும் படிக்காத இளைஞர்கர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து கொண்டு வருகிறது. எனினும், வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால், ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில்,வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 25ம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறைகளை சேர்ந்த நிறுவனத்திற்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது.

employment camp,tirunelveli , வேலைவாய்ப்பு முகாம்,திருநெல்வேலி

காலை 10: 30 மணிக்கு தொடங்க உள்ள இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இதில் வேலை கிடைக்கும் பட்சத்தில் அரசு பணிக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் பக்கத்தில் இணைந்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :