Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

டிசம்பர் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sat, 25 Nov 2023 10:45:21 AM

டிசம்பர் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி: தமிழகத்திற்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,tirunelveli ,வேலைவாய்ப்பு முகாம்  , திருநெல்வேலி

இதனை அடுத்து இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் வரையிலும் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரம், கல்வி சான்று , ஆதார் அட்டை ஆகிய முக்கிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :