Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 23 Aug 2022 1:08:53 PM

மதுரையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், மதுரையில் மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டது. தற்போது முதன்முறையாக மதுரையில் நடைபெற இருக்கிறது.

மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. மேலும், இம்முகாமில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மதுரையில் மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று தான் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிறுவனர் காசிம்பாசித், மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் என பலரும் கலந்துகொண்டனர்.

employment camp,madurai ,வேலைவாய்ப்பு முகாம்,மதுரை

இதையடுத்து செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் திருநங்கைகள், திருநம்பிகள் என்று அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.weareyourvoice.org என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தங்களது விவரங்களை பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் 75575 50999, 97007 9999 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :