Advertisement

இங்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 11 Apr 2023 3:54:12 PM

இங்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி :தூத்துக்குடியில் ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது .... தமிழகத்தில், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இம்முகாம் காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

employment camp,thoothukudi ,வேலைவாய்ப்பு முகாம்,தூத்துக்குடி

மேலும் இம்முகாமில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் சுய விவர சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதையடுத்து இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும், அறிவித்து உள்ளனர். மேலும் தொடர்பிற்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :