Advertisement

வருகிற 18-ம் தேதி செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 15 Mar 2023 12:11:53 PM

வருகிற 18-ம் தேதி செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்தவேலையில்லா இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. அந்தவகையில் வரும் மார்ச் 18-ம் தேதிநடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்று வேலைநாடுநர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது இந்த ஆண்டுக்கான மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 18-ம் தேதி வித்யாசாகர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தவுள்ளது.

employment camp,chengalpattu ,வேலைவாய்ப்பு முகாம்,செங்கல்பட்டு

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இதனை அடுத்து 18 முதல் 40 வயது வரை: இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்கலாம். இவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 18-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரைமுகாமில் கலந்துகொண்டு உரியவேலையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in https://tnprivatejobs.tn.gov.inஇணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவதன் மூலம் தொடர்புடைய நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்படமாட்டாது.

Tags :