Advertisement

திண்டுக்கலில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 18 Jan 2023 5:44:12 PM

திண்டுக்கலில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் : இது குறித்து ஆட்சியர் விசாகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- வேலைவாய்ப்பு துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

எனவே இந்த முகாம் ஜனவரி 2023-ஆம் மாதத்தில் 20.01.2023 காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

employment camp,dindigul ,வேலைவாய்ப்பு முகாம்,திண்டுக்கல்

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், இந்த முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்பத்தப்பட்டு வரும் பல இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :