Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் (அக்.14) வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 13 Oct 2022 3:08:25 PM

நாமக்கல் மாவட்டத்தில்  (அக்.14) வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் :வேலைவாய்ப்பு முகாம் ... நாளை (அக்.14) நாமக்கல் மாவட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இதில் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகப்பில் இளநிலை தொழில் நிபுணர்கள் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக 16,557 மற்றும் போனஸ் தொகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

employment camp,namakkal ,வேலைவாய்ப்பு முகாம்,நாமக்கல்

இதனை அடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாள் பயிற்சி வழங்கப்படும்.

மேலும் இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். மேலும் மேற்படிப்பிற்கான வாய்ப்புகளும் அளிக்கப்படும். அத்துடன் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடங்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :