Advertisement

நாளை சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 15 June 2023 3:22:04 PM

நாளை சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை : தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர்களின் நலனுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

அதன்படி காலை 10 மணி முதல் நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் இலவச திறன் பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,sivagangai , வேலைவாய்ப்பு முகாம் ,சிவகங்கை

மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ என அனைத்து பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் நாளை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு அனைத்து கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :