Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Mon, 12 June 2023 3:25:55 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை : தமிழக இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் வருகிற 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ....... தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

employment camp,thiruvannamalai ,வேலைவாய்ப்பு முகாம்,திருவண்ணாமலை


இதையடுத்து இம்முகாமில் 15க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. அதன் மூலம 300க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இம்முகாம் 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் கார்டு, சாதிச்சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன் நேரில் வர வேண்டும்.

மேலும் விருப்பமுள்ள இளைஞர்கள் www.tnprivatcjobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் அல்லது 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :