வரும் 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்பெற அழைப்பு
By: Nagaraj Sat, 25 Nov 2023 7:06:30 PM
திருநெல்வேலி: வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் வரையிலும் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரம், கல்வி சான்று , ஆதார் அட்டை ஆகிய முக்கிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.