Advertisement

சேலம் மாவட்டத்தில் நவ.18 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 16 Nov 2023 2:59:49 PM

சேலம் மாவட்டத்தில் நவ.18 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சேலம் : வருகிற நவ.18 ஆம் தேதி பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம் .. ... தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏ.வி.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் நவ.18 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த முகாமில் வங்கிகள், காப்பீடு, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கட்டிடம் சார்ந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன.

employment camp,salem ,வேலைவாய்ப்பு முகாம்,சேலம்


காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி பெற்றவர்களும் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 9499055941 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :