Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு

ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு

By: Karunakaran Wed, 10 June 2020 10:25:42 AM

ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள், தினக்கூலி பணியாளர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியின்றி இருப்பதால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சொந்த ஊரில் உள்ள அவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த வேலை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,பீகாரில் இருந்து சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலில் இருந்து மீண்டுவருகின்றனர்.

corona virus,migrant workers,odisha,100 days work ,கொரோனா வைரஸ்,புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் , ஒடிசா,100 நாள் வேலை திட்டம்

இதுகுறித்து ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘நான் பீகாரில் கார்பெண்டராக வேலை செய்தேன். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஊருக்கு வந்துவிட்டேன். இப்போது 6 நாட்களாக இங்கு வேலை செய்கிறேன். இந்த வேலை எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜாஜ்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 2916 திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஏ திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags :
|