Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்குக்கு முடிவு; பங்கி ஜம்பிங் செய்து கொண்டாடிய மேயர்

ஊரடங்குக்கு முடிவு; பங்கி ஜம்பிங் செய்து கொண்டாடிய மேயர்

By: Nagaraj Fri, 15 May 2020 6:46:05 PM

ஊரடங்குக்கு முடிவு; பங்கி ஜம்பிங் செய்து கொண்டாடிய மேயர்

ஊரடங்கு முடிவுக்கு வந்ததால் பங்கி ஜம்பிங் செய்து கொண்டாடினார் குயின்ஸ்டவுன் ஏரிகள் மாவட்ட மேயர்.

நியூசிலாந்து நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னர் படிப்படியாக நாட்டை மீண்டும் திறக்கப்போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மே 14 ஆம் தேதி அறிவித்தார். நியூசிலாந்து மக்கள் இப்போது சில்லறை கடைகள், மால்கள், உணவகங்கள், சினிமாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஜிம்கள் உள்ளிட்ட பொது இடங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் நியூசிலாந்து நாட்டில் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொண்டாட்டங்களில் குயின்ஸ்டவுன் ஏரிகள் மாவட்ட மேயர் ஜிம் போல்ட்டும் இணைந்துள்ளார்.

funky jumping,mayor,social website,celebration,curfew ,பங்கி ஜம்பிங், மேயர், சமூக வலைதளம், கொண்டாட்டம், ஊரடங்கு

தனது கொண்டாட்டத்தை சாகச விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

குயின்ஸ்டவுன் ஏரிகள் மாவட்ட கவுன்சிலின் ஃபேஸ்புக் பக்கத்தில், கவராவ் ஆற்றில் பங்கீ-ஜம்பிங் சாகசத்தில் சிலர் ஈடுபடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ஏழு வாரங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பிரிட்ஜ் பங்கி மையத்தில் முதல் பங்கீ-ஜம்பிங்கில் ஈடுபட்டார் மாவட்ட மேயர்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|