Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவு

சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவு

By: vaithegi Wed, 27 July 2022 07:22:28 AM

சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவு

புதுடெல்லி: 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு பற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கொண்டு வருகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசாரணைக்காக சோனியா காந்திக்கு 2 முறை சம்மன் அனுப்பியும், கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன்பாக அவரால் ஆஜராக முடியவில்லை.

எனவே தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

மேலும் 2-வது முறையாக ஆஜர் சோனியாவிடம் 26-ந் தேதி 2-வது முறையாக விசாரணை நடத்தப்படும் என அறிவித்த அமலாக்கத்துறை, இதற்காக அவருக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதன்படி அவர் நேற்று தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரோடு, 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்போடு அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தார்.

enforcement directorate,sonia gandhi ,அமலாக்கத்துறை ,சோனியா காந்தி

அதன்பின் ராகுல் காந்தி அங்கிருந்து போய்விட்டார். அதைத்தொடர்ந்து சம்மன் சரிபார்ப்பு, வருகை தந்ததற்காக கையெழுத்திடல் ஆகிய நடைமுறைகள் நடத்தி முடித்து, காலை 11.15 மணிக்கு சோனியாவிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். விசாரணை நடத்தப்பட்ட அறைக்கு பக்கத்து அறையில், கொரோனாவில் இருந்த மீண்டு வந்துள்ள தாயார் சோனியாவுக்கு தேவைப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுடன் பிரியங்கா காந்தி இருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஏறத்தாழ 2½ மணி நேரம் சோனியாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து மதிய சாப்பாட்டுக்காக சோனியா, மகள் பிரியங்காவுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். 7 மணி வரை விசாரணை பகல் 3½ மணிக்கு சோனியா மீண்டும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இது மாலை 7 மணி வரை தொடர்ந்தது. ஏறத்தாழ 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையின்போது, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனத்தினை 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியதில் சோனியாவின் பங்களிப்பு என்ன, கம்பெனி நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகள் என்ன, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து 7 மணி அளவில் சோனியா காந்தி புறப்பட்டு சென்றார்.

மேலும் சோனியா காந்தி வீட்டுக்கும், அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கும் இடையேயான 1 கி.மீ. தொலைவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்றும் தொடருகிறது சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறி உள்ளது. எனவே இன்று மீண்டும் அவரிடம் விசாரணை தொடரும் என தெரிவித்துள்ளது.

Tags :