Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரனிடம் அமலாக்கத்துறை விசாரணை

தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரனிடம் அமலாக்கத்துறை விசாரணை

By: Nagaraj Sun, 16 Aug 2020 10:53:42 AM

தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரனிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளாவை உலுக்கி வரும் முக்கிய விஷயம் தங்க கடத்தல் வழக்குதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவசங்கரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெகு நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கரனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

officers,sivasankaran,enforcement department,investigation ,அதிகாரிகள், சிவசங்கரன், அமலாக்கத்துறை, விசாரணை

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசங்கரனிடம் நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரித்தனர்.

Tags :