Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சான்பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு; ரஷ்யாவில் தரையிறக்கம்

சான்பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு; ரஷ்யாவில் தரையிறக்கம்

By: Nagaraj Wed, 07 June 2023 08:47:26 AM

சான்பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு; ரஷ்யாவில் தரையிறக்கம்

அமெரிக்கா: விமானத்தில் என்ஜின் கோளாறு... டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது.

flight,san francisco,alternate arrangements,engine failure ,விமானம், சான்பிரான்சிஸ்கோ, மாற்று ஏற்பாடுகள், என்ஜின் கோளாறு

தரையிறக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் பயண இலக்குகளை சென்றடைவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|