Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி சிறிய ரக ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி சிறிய ரக ஹெலிகாப்டர்

By: Nagaraj Sat, 18 July 2020 4:34:30 PM

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி சிறிய ரக ஹெலிகாப்டர்

விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இம்முறை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சிறிய ரக ஹெலிகாப்டரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

engine helicopter,mars,nasa,to explore ,இன்ஜினிட்டி ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகம், நாசா, ஆய்வு செய்ய

இந்நிலையில் ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்ததாக நாசா கூறியுள்ளது.

ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் ஏவப்பட்டு அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை அடையும் விண்கலத்தில் இன்ஜினிட்டி ஹெலிகாப்டரைக் கொண்டு செல்லவும் நாசா முடிவு செய்துள்ளது.

Tags :
|
|