Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் கல்லூரி கலந்தாய்வு புள்ளிவிவர அறிக்கை வெளியாகி இருக்கிறது

பொறியியல் கல்லூரி கலந்தாய்வு புள்ளிவிவர அறிக்கை வெளியாகி இருக்கிறது

By: vaithegi Mon, 04 Sept 2023 1:40:10 PM

பொறியியல் கல்லூரி கலந்தாய்வு புள்ளிவிவர அறிக்கை வெளியாகி இருக்கிறது

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் TNEA 2023 எனப்படும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த ஜூலை 22 -ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வில் முதலில் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மானவர்களுக்கு நடைபெற்றது.

அதன் பின் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதன் பின் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28 -ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கலந்தாய்வு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

college of engineering,review ,பொறியியல் கல்லூரி ,கலந்தாய்வு

இதையடுத்து அதில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு 10,234 மாணவர்கள் அதிக இடங்களை தேர்வு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,60,780 சீட்கள் இருக்கின்றன. அதில் 3 ரவுண்ட்டுகள் முடிவில் 95,046 சீட்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், அது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் அதே போன்று மொத்தமாக பொறியியல் பாடப்பிரிவில் சீட் எடுத்தவர்கள் எண்ணிக்கை 1,06,104 ஆகும். அதில் காலியாக இருக்கும் சீட்கள் 54,676 ஆகும். இதிலிருந்து பொறியியல் படிப்பை மாணவர்கள் அதிகம் விரும்புவதில்லை என தெரிகிறது. மேலும் மாணவர்கள் Artificial Intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகள் வேகமாக வளர்ந்து வருவதால் அதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும் மாணவர்கள் அதிகமாக அரசு கல்லூரிகளை தேர்வு செய்வதாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Tags :