Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

By: vaithegi Sun, 25 June 2023 10:38:39 AM

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு ...... அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.

இதனை அடுத்து இந்த இடங்களில் 2023–24ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

ranking,engineering consulting ,தரவரிசை,பொறியியல் கலந்தாய்வு

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 26) வெளியாகவுள்ளது.

மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். இதையடுத்து தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வருகிற ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

Tags :