Advertisement

பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடக்கம்

By: vaithegi Mon, 08 Aug 2022 5:45:14 PM

பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக கால தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்க என கூறப்பட்டது. இதனால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

engineering consultation,minister ponmudi , பொறியியல் கலந்தாய்வு ,அமைச்சர் பொன்முடி

இதை தொடர்ந்து இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் அக்.21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம். கலந்தாய்வு பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியா இருந்தாலும் சரி கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும். என அவர் கூறியுள்ளார்.

Tags :