Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் மாணவர்களான கலந்தாய்வு… ஆக.16-ம் தேதி முதல் தொடங்கும்

பொறியியல் மாணவர்களான கலந்தாய்வு… ஆக.16-ம் தேதி முதல் தொடங்கும்

By: vaithegi Wed, 08 June 2022 4:43:26 PM

பொறியியல் மாணவர்களான கலந்தாய்வு… ஆக.16-ம் தேதி முதல் தொடங்கும்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என கூறியுள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 19 வரை பொறியியல் கல்லூரிக்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் முதல் நடைபெறும் என தகவல் வந்துள்ளது.

விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8 வெளியிடப்படும். ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு, அக்டோபர் 15, 16 ல் துணை கலந்தாய்வு, எஸ்.சி. மாணவர்களுக்கு அக்டோபர் 17, 18 கலந்தாய்வு. பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரி உள்பட மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவதுதான். இதற்கு பள்ளி கல்வி துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Tags :