Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிபபு மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்ததில் இருந்து 1 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர வேண்டும்.... உயர் கல்வித்துறை

பொறியியல் படிபபு மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்ததில் இருந்து 1 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர வேண்டும்.... உயர் கல்வித்துறை

By: vaithegi Sat, 10 Sept 2022 4:32:14 PM

பொறியியல் படிபபு  மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்ததில் இருந்து 1 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர வேண்டும்....    உயர் கல்வித்துறை

சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கப்பட இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஆனதால் கலந்தாய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 8ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து இன்று பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

department of higher education,engineering , உயர் கல்வித்துறை,பொறியியல் படிபபு

மேலும் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்றும் இதில் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் தேர்வு செய்ததில் இருந்து 1 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர வேண்டும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதை அடுத்து இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் வீணாவதை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி உள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வில் 2,700 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர ஆர்வத்துடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags :