Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது - டெட்ரோஸ் ஆதனாம்

கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது - டெட்ரோஸ் ஆதனாம்

By: Karunakaran Wed, 14 Oct 2020 2:34:45 PM

கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது - டெட்ரோஸ் ஆதனாம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ள நிலையில் சோதனை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

enhancing immunity,prevention,corona virus,tetros adenam ,நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பு, கொரோனா வைரஸ், டெட்ரோஸ் ஆதனாம்

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் மூலம் வைரசை கட்டுப்படுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். கொரோனா வைரசை பொதுமக்களிடம் பரவவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த பெருந்தொற்றை தடுத்து விடலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இது தான் கொரோனாவை தடுத்து நிறுத்த ஒரே வழி என்றும் கருத்துகின்றனர். இதற்கு அது தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே நோய் எதிர்ப்பு சக்தி என்பதே தவிர வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவது அல்ல. ஒரு பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எவ்வாறு மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பது குறித்த சிறு சிறு தகவல்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. நாம் இதுவரை முமுமையாக புரிந்துகொள்ளாத ஒரு கொடிய வைரசை சுதந்திரமாக பரவ விடுவது நெறிமுறையற்றது என அறிவித்துள்ளார்.

Tags :