Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி சான்றிதழில் போலீஸ் பணியில் சேர்ந்தவர்; 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை

போலி சான்றிதழில் போலீஸ் பணியில் சேர்ந்தவர்; 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை

By: Nagaraj Thu, 02 July 2020 11:35:19 AM

போலி சான்றிதழில் போலீஸ் பணியில் சேர்ந்தவர்; 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை

போலி சான்றிதழ் கொடுத்து காவல்துறையில் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவர் குறித்த தற்போது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது இவருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் கிடைத்து மதுரையில் தலைமை காவலராக உள்ளார்.

fake certificate,police work,case record,investigation ,போலி சான்றிதழ், போலீஸ் பணி, வழக்குப்பதிவு, விசாரணை

இந்நிலையில் முருகன் மோசடி அடிப்படையில் போலீசில் பணிக்கு சேர்ந்ததாக மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு வந்துள்ளது. இதன் அடிப்படையில் எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் விசாரணை செய்ததில் முருகன் மோசடி செய்து பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்தது.

அதாவது முருகன் தனது போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி தான் காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 23 ஆண்டுகள் கழித்து முருகன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது அம்பலமாகியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது சான்றிதழை எப்படி சரிபாரக்காமல் விட்டனர் என்பதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் எத்தனை பேர் உள்ளனரோ என்றும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நபர்களால் திறமை உள்ளவர்களுக்கு பணி கிடைக்காமல் போய்விடுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :