Advertisement

பாபநாசத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

By: Nagaraj Fri, 28 July 2023 10:02:22 AM

பாபநாசத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் சுமதி. கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

micro enterprises,employment,scheme,regularization,description ,குறு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, திட்டம், முறைப்படுத்தல், விளக்கம்

மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் குணசேகரன், புள்ளி விவர ஆய்வாளர் ஞானாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர். பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும், குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், புதிய தொழில் முனைவர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் , அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.

இம்முகாமில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
|