Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் போட்டி?

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் போட்டி?

By: Nagaraj Mon, 28 Sept 2020 8:23:03 PM

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் போட்டி?

கடும் போட்டி நிலவுகிறது... அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன், என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, ஆனால் உங்களை (ஈபிஎஸ்)முதல்வர் ஆக்கியது சசிகலா எனத் தெரிவித்தாராம்.

chief ministerial candidate,competition,aiadmk executive committee,minister ,முதல்வர் வேட்பாளர், போட்டி, அதிமுக செயற்குழு, அமைச்சர்

அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என்று கூறியுள்ளார். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார், கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என ஈபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நல்ல முடிவெடுங்கள் என அமைச்சர் வேலுமணி கூறியதாக தெரிகிறது. இருவரும் விட்டுக் கொடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இடையில் முதல்வர் வேட்பாளருக்கான போட்டி நிலவுவது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

Tags :