Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகள்களுக்கும் சமமான சொத்துரிமை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மகள்களுக்கும் சமமான சொத்துரிமை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By: Nagaraj Tue, 11 Aug 2020 6:58:42 PM

மகள்களுக்கும் சமமான சொத்துரிமை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சமமான சொத்துரிமை... இந்து கூட்டு குடும்பங்களில் மகள்களுக்கும் சமமான சொத்துரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டம் செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதீபதிகள் அளித்த தீர்ப்பில், 2005 ல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மகள்களுக்கு சொத்துரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன்களுக்கும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சரிச மான பங்கு வழங்கி சொத்துரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி அருண் மிஸ்ரா, வாழ்நாள் முழுதும் மகள்கள் பெற்றோரின் அன்புக்குரிய மகள்களாகவே இருப்பார்கள் என கூறினார்.

judgment,reception,daughters,property,chief ,தீர்ப்பு, வரவேற்பு, மகள்களுக்கும், சொத்து, முதலமைச்சர்

இதற்கிடையில் சொத்துரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இதய பூர்வமாக வரவேற்பதாகவும், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுவதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Tags :