Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னார்குடி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மன்னார்குடி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

By: Nagaraj Sat, 14 Jan 2023 5:43:54 PM

மன்னார்குடி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருவாரூர்: மன்னார்குடி கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

equality pongal,students,dance,colleges,celebration ,சமத்துவ பொங்கல், மாணவர்கள், நடனம், கல்லூரிகள், கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சேலை அணிந்தும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் கரும்பு வைத்து வெள்ளைப் பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் வைத்து பொங்கலை கொண்டாடினர்.


பொங்கல் பொங்கல் வெடித்ததும், பொங்கலோ பொங்கல் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பும் சத்தம் வானத்தை நிறைத்தது. அதன் பிறகு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

பரதம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் மேடையில் நடனமாட, கீழே நின்றிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடனமாடி மகிழ்ச்சியுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

Tags :
|