Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எரிக் கார்செட்டி இந்திய தூதராகிறார்... அமெரிக்க செனட் சபை அனுமதி

எரிக் கார்செட்டி இந்திய தூதராகிறார்... அமெரிக்க செனட் சபை அனுமதி

By: Nagaraj Thu, 16 Mar 2023 6:43:25 PM

எரிக் கார்செட்டி இந்திய தூதராகிறார்... அமெரிக்க செனட் சபை அனுமதி

அமெரிக்கா: இந்தியாவுக்கான தூதர்... லாஸ் ஏஞ்சல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை, இந்தியாவுக்கான தூதராக நியமிக்க அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் பதவி விலகினார். தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார்.

india,united states,ambassador,appointment,confirmation,voting ,இந்தியா, அமெரிக்கா, தூதர், நியமனம், உறுதி, வாக்கெடுப்பு

பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில், கார்செட்டி நியமனத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகின.

இதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Tags :
|