Advertisement

ஈரோடு இடைத் தேர்தல்... தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:19:36 AM

ஈரோடு இடைத் தேர்தல்... தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி

ஈரோடு: ஈரோடு இடைத் தேர்தலுக்காக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியது.

திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18ம் தேதி வெளியானது.

அதன்படி, ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் ஓட்டு மூலம் 80 வயதுக்கு மேற்பட்டோர் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் உள்ளனர். வாக்குச்சாவடிக்கு செல்லாமல் தபால் ஓட்டு மூலம் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக கடந்த 4ம் தேதி முதல் அப்படிப்பட்டவர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்களிடமிருந்து தனி படிவம் பெறப்பட்டது.

by-election,collection,east constituency,erode,postal,votes , இடைத்தேர்தல், ஈரோடு, கிழக்கு தொகுதி, சேகரிப்பு, தபால், வாக்குகள்

இப்பணிகள் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன் தலைமையில் நடந்தது. தபால் ஓட்டு பதிவு செய்தவர்களிடம் தபால் ஓட்டு சேகரிக்க நேற்று 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். மீண்டும், பெட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

நேற்று வீட்டில் இல்லாதவர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) பெற உள்ளனர். இன்றும் அவர்கள் இல்லை எனில் வருகிற 20-ந்தேதி மீண்டும் வீட்டுக்கு வருவார்கள். அன்றும் அந்த வாக்காளர் இல்லை என்றால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது.

மேலும் வருகிற 27-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவின்போது, அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படாது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|
|