Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி - கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி - கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

By: Monisha Wed, 01 July 2020 4:58:54 PM

தேனி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி - கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி பகுதிகளில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் வருகிற 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது.

corona virus,theni district,restrictions,curfew,stores ,கொரோனா வைரஸ்,தேனி மாவட்டம்,கட்டுப்பாடுகள்,ஊரடங்கு,கடைகள்

அதன்படி, டீக்கடைகள், பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை, பெட்டிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை, டி.வி, செல்போன், எழுதுபொருட்கள், காலணி விற்பனை கடைகள், சாலையோர உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கக்கூடாது.

மருந்துக்கடைகள், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் செயல்படலாம். கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், தொழிற்சாலைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், இறைச்சி கடைகள் செயல்படலாம். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் மருத்துவ அவசர காரணங்களுக்கு மட்டும் இயங்கலாம். இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
|