Advertisement

உக்ரைனுக்கு மேலும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:07:40 AM

உக்ரைனுக்கு மேலும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

உக்ரைன்: மேலும் உதவ முடிவு... சமீப நாட்களாக உக்ரேனிய படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்கள் மற்றும் பீரங்கிகளுடன் ரஷ்ய துருப்புக்களை பின்வாங்க செய்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் ராஜதந்திர தலைவர் தெரிவித்தார்.

member states,ukraine,decision to assist,additional,financing ,உறுப்பு நாடுகள், உக்ரைன், உதவ முடிவு, கூடுதல், நிதியுதவி

இது தொடர்பில் அவர் கூறியதாவது. அண்மை நாட்களில், உக்ரேனியப் படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ரஷ்ய துருப்புக்களை நாட்டின் கிழக்குப் பகுதியில் அவசரமாக பின்வாங்கச் செய்தன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலாக ஒன்பது பில்லியன் யூரோக்களை இராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதில் ஒரு பில்லியன் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றொரு ஐந்து பில்லியன் யூரோக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள மூன்று பில்லியன் யூரோக்கள் உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பொறுத்தது என்று கூறினார்.

Tags :