Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள்தான் இறக்குமதி செய்கின்றன

ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள்தான் இறக்குமதி செய்கின்றன

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:42:36 PM

ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள்தான் இறக்குமதி செய்கின்றன

புதுடெல்லி: ஐரோப்பிய யூனியன் நாடுகள் தான் ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் கூறியதாவது: இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவில் இருந்து 6 மடங்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளன.

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலேனா பேயர்போக் நேற்றும் இன்றும் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் தங்கியிருந்த போது பேயர்போக்கிர்கு விருந்தளித்தார்.

பின்னர் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும். இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

india,oil,russia,india,imports,russia,european union,crude oil ,இந்தியா, இறக்குமதி, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், கச்சா எண்ணெய்

இதையடுத்து இருவரும் கூட்டாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றார்.

இதையடுத்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் அதிக அளவில் எரிபொருளை வாங்கியுள்ளது. இது மற்ற 10 நாடுகளை விட அதிக எரிபொருள். இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் 6 மடங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

ஏனெனில் நாங்கள் எரிவாயுவை இறக்குமதி செய்வதில்லை என்றார். ரஷ்யாவின் எரிபொருள் கண்காணிப்பு இணையதளத்திற்குச் சென்று அதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தெந்த நாடுகள் அனைத்தையும் இறக்குமதி செய்தன என்பது பற்றிய விரிவான தகவல்கள் இணையதளத்தில் உள்ளன. அது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

Tags :
|
|
|
|
|