Advertisement

கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வரும் ஐரோப்பா நாடுகள்

By: Karunakaran Fri, 30 Oct 2020 1:48:48 PM

கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வரும் ஐரோப்பா நாடுகள்

பிரான்ஸ் நாட்டில் இலையுதிர் காலம் தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த நாடு கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 1 மாத காலத்துக்கு (நவம்பர் இறுதிவரை) ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பிராந்தியங்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்பெயின், அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சில நாடுகள் நம்மை விட கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. நாம் அனைவரும் ஒரே நிலையில் இருக்கிறோம். முதல் அலையை விட 2-வது அலை ஆபத்தானது என்பதை நாம் அறிவோம். அடுத்த 2 வாரத்தில் நிலைமை மேம்பட்டால் சில கடைகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

european countries,2nd wave,corona virus,france ,ஐரோப்பிய நாடுகள், 2 வது அலை, கொரோனா வைரஸ், பிரான்ஸ்

ஜெர்மனியிலும் பகுதி ஊரடங்கு 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக நாடு தற்போது செயல்பட்டாக வேண்டும், தேசிய அளவில் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தி உள்ளார். ஸ்பெயின் நாட்டில் வைரஸ் நிலைமை மோசமாகி வருவதால் அண்டலுசியா, காஸ்டில்லா மாஞ்சா, காஸ்டில், லியோன், முர்சியா ஆகிய பிராந்தியங்களிலும் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

அண்டலுசியாவில் உள்ள கிராண்டா, ஜெய்ன், செவில் ஆகிய மாகாணங்களில் பகுதி நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இத்தாலியில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து விட்டன. பெல்ஜியத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக அதன் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவின் 2-வது அலை மோசமாக உள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், பெருந்தொற்று நோய் வேகமாக உச்சத்தை நெருங்குகிறது என தெரியவந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி போல இங்கிலாந்து தேசிய அளவில் ஊரடங்கு போடாமல், பிராந்திய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து பின்பற்ற வைத்துள்ளது.


Tags :